இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன.
அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்குகரையின் ஹவ்ரா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்த சிலர் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.