கனடிய ராணுவ நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு படையினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படாது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளை ரத்து செய்வதற்கு ராணுவ நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதனால் சுமார் 7,700 படையினர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பிற்கு பதிலீடாக வீடு அமைப்பு நலன்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ரத்து செய்யப்படுவதற்கு படையினர் பல்வேறு வழிகளில் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களிலும் இது தொடர்பிலான கருத்து பதிவுகளை அவதானிக்க முடிகின்றது.
ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதில் நெருக்கடி நிலை நிலவி வரும் சூழ்நிலையில் இவ்வாறு கொடுப்பனவு குறைப்பது உசிதமாகாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.