Home உலகம் ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தி

ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தி

by Jey

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என வேதனை தெரிவித்து உள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.

related posts