Home இந்தியா யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜராகவில்லை பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி

யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜராகவில்லை பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி

by Jey

நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து , நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

2021-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி நடிகை யாஷிகா ஆனந்த் தனது 3 நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் சொகுசு காரில் சென்னை திரும்பினார்.

மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் வரும்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்துடன் காரில் வந்த அவருடைய நெருங்கிய தோழியான ஐதராபாத்தை சேர்ந்த வள்ளிபவனி செட்டி பலியானார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது 2 ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.

இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் வாய்தா கடந்த 21-ந்தேதி வந்தபோது யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

related posts