நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12-வது நாளாக முடங்கியது.
ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.
12வது நாளவதாக மக்களவை இன்று கூடியதும், ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து சபாநாயகர் இருக்கையை, காங்., – எம்.பி.,க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.