Home இலங்கை இலங்கையில் உண்மையை கண்டறியும் குழு

இலங்கையில் உண்மையை கண்டறியும் குழு

by Jey

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இலங்கையில் உண்மையை கண்டறியும் குழு ஒன்று இந்த சந்தர்ப்பத்தில் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபையில் நேற்று (28.03.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

இலங்கையில் பல ஆண்டுகளாக பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில் அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனைவிடுத்து, புதிதாக தென்னாபிரிக்காவின் மாதிரியை ஒத்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது, ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக உண்மையை கண்டறியும் குழு தொடர்பில் இலங்கையின் அமைச்சர்களாக அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு சென்று வந்த நிலையிலேயே அம்பிகா சற்குணநாதனின் கருத்து வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

related posts