மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அண்ணாமலை ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் எப்போதும் எதிர்ப்பு உண்டு. இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக் கூடாது என்றும், தாஹி என்ற இந்தியில் எழுத வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் உணவு பாதுகாப்பு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தியை திணிக்க வேண்டாம். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! என்று எச்சரிக்கை விடுத்து பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழநாடு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்தத்தில், பிராந்திய மொழியை மட்டும் பயன்படுத்தாமல் தயிர் பாக்கெட்டுகளில் “தாஹி” பயன்படுத்துமாறு அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால் சங்கங்களை கட்டாயப்படுத்தி
FSSAI சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் “தி இந்து” ஒரு கட்டுரையை வெளியிட்டது.
நமது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு எப்போதும் பிராந்திய மொழிகளை ஊக்குவித்து வருகிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
முதன்முறையாக புதிய கல்விக் கொள்கையில் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நமது பிரதமர், பல்வேறு உலகளாவிய மன்றங்களில், செழுமையைப் பாராட்டியுள்ளார்.
அப்படியிருக்கையில், தமிழ்நாட்டில் அரசு கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறுமாறு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்துவதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ்பூசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் FSSAI வெளியிட்ட இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை என்றும், அவர் மாநில மொழிகளை ஊக்குவித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.