Home இலங்கை எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலை குறைப்பு

by Jey

என பொது மக்கள் தமது எரிபொருள் விலை குறைப்பானது மகிழ்ச்சிக்குரிய விடயம் கருத்தினை பதிவிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கிடைத்தமை தொடர்ந்து நேற்று (29.03.2023) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை குறைப்பானது பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு மத்தியில் வாழ்கின்ற மக்களுக்கு ஓரளவு ஆதரவளித்துள்ளது.

அத்துடன் தேவையான விடயங்களிலும் கவனம் செலுத்துவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதிகள் கூறுகையில், குறித்த விலை குறைப்பானது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தாலும் இதற்கமைய கட்டணங்களை குறைக்க முடியாது.

இந்த விலைக்குறைப்பானது போதுமானாதாக இல்லை. எனவே போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அரசாங்கம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது உதிரிப்பாகங்களின் விலை குறைவடைந்தால் நாங்கள் கட்டணங்களை குறைத்து அறவிடலாம்.பொருட்களின் விலையேற்றம் காரணமாக கடும் சிரமத்திற்குள்ளாகி வாழ்ந்து வருகின்ற இந்நிலையில் எங்கள் வருமானம் பிள்ளைகளின் தேவைகளையும் அன்றாட வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்வதற்குமே போதுமானதாக உள்ளது.

எங்களுக்கு கட்டணங்களை குறைத்து அறவிட முடியாது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று எங்களுக்கு சவாரிகளும் குறைந்து தான் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்திடம் மக்கள் வலியுறுத்தல்
மேலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய மின் கட்டணம் மற்றும் நீர், தொலைபேசி, போக்குவரத்து உள்ளிட்ட உயர்த்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் மீண்டும் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts