கனடாவில் சீன சமூகம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடடுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் சீனத் தலையீடு குறித்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகி;ன்றன.
இதனால், கனேடிய வாழ் சீன சமூகம் ஓரங்கட்டப்படக்கூடிய சவால் உருவாகியுள்ளது.
கனடாவில் வாழ்ந்து வரும் சீன அரசியல்வாதிகள், சீன கல்வியியலாளர்கள் இந்த சவால்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.
கனடிய விவகாரங்களில் சீன அரசாங்கம் தலையீடு செய்தது என்ற குற்றச்சாட்டு, கனடாவில் சீன சமூகத்தினர் அரசியலில் ஈடுபடுவதற்கும் எனைய பொதுச் சேவைகளை மேற்கொள்ள தடையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.