காலநிலை மாற்றம் காரணமாக கனடாவில் மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆபத்து மிக்க பக்றீரியா கடல்கள் வெப்பமடைந்தால் உருவாகும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் பதிவான ஆபத்து மிக்க பற்றீரியா வகையே இவ்வாறு கனடாவிலும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் பரவி, உடலையே சாப்பிடும் ஆபத்தான பக்றீரியா விபிரிரோ வுலுனிபிகோஸ் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் இந்த ஆபத்து மிக்க பக்றீரியாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
கடந்த சில தசாப்தங்களாக வட அமெரிக்க பகுதிகளில் அதிகளவில் இந்த பக்றீரியா பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.