Home கனடா கனடிய வீசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் கைது

கனடிய வீசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் கைது

by Jey

கனடிய வீசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவர் கைது செய்ய்பபட்டுள்ளார்.

மாணவர் வீசா ஆவண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய முகவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கனடாவிற்கு மாணவர் வீசாவில் வருகை தந்த சிலர் இந்தியாவிற்கு மீள அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் வீசா விண்ணப்பங்களில் மோசடியான ஆவணங்களை வழங்கியதாக இந்த மாணவர்கள் மீது கனடிய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், இந்த குற்றச் செயலை முகவர்களே மேற்கொண்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ராஹ_ல் பார்க்வா என்ற நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தாங்கள் மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும், மோசடிகாரர்களின் சதி வலையில் சிக்கியதாகவும் இந்திய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

related posts