Home இலங்கை திருகோணமலையில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

திருகோணமலையில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

by Jey

திருகோணமலை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிர்மாணிக்கும் யோசனையை இந்தியா முன்வைத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் உள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கிகள் அடங்கிய தொகுதியை இந்தியா அபிவிருத்தித்திட்டம் ஒன்றுக்காக கோரியுள்ளதுடன் இதற்கு மேலதிகமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது மேற்படி விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதனிடையே மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்கல், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதி வழங்க அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்தது.

related posts