மரணத்தை ஏற்படுத்தும் மார்பேர்க் என்ற வைரஸ் ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
தன்சானியா, கினியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மார்பேர்க் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திக்கூடிய மற்றும் பரவும் திறன் கொண்ட வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தீவிரமான காய்ச்சல், உட்புற,வெளிபுற இரத்த போக்கு மற்றும் தலைவலி என்பன இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.