செல்வந்தர்களிடமே கூடுதல் கார்பன் கட்டணம் அறவீடு செய்யப்படும் என கனடிய சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த அமைச்சர் ஸ்டீவன் கில்பில்ட் தெரிவித்துள்ளார்.
நியாயமான அடிப்படையில் கார்பன் வெளியீட்டு கட்டணம் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், கார்பன் வெளியீடு குறைப்பதற்காக வழங்கப்படும் ஊக்கத் தொகையிலும், கார்பன் வெளியீட்டுக் கட்டணங்கள் அதிகம் என்பதனை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் சக்தி வள தேவைகளுக்காக கனடியர்கள் செலவிடும் தொகையை குறைப்பதற்கு பல வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தொன கார்பன் வெளியீட்டுக் கட்டணம்; 50 டொலரிலிருந்து 65 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கார்பன் வெளியீட்டு கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.