உலக அளவில் கச்சா எண்ணெய் சவுதி அரேபியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளே உற்பத்தி செய்கின்றன.உலகளாவிய பொருளாதாரமானது கச்சா எண்ணெய் மற்றும் அது தொடர்பான விலையை பொருத்தே அமைந்துள்ளது.
இதனிடையே, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒப்பெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இந்த கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா அன்றாட கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்கவுள்ளது.
வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை அன்றாட 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.