கனடாவின் றொரன்டோவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நகரின் பிரதி மேயர் ஜெனிபர் மெக்கெல்வீ இந்த யோசனை முன்வைத்துள்ளார்.
பாதைகளின் குறுக்கு சந்திகளை முடக்கும்; வகையில் வாகனங்களை தரித்து நிறுத்தும் சாரதிகளுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
அபராதத் தொகையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது விதிக்கப்படும் 85 டொலர் என்ற அபராதத் தொகை 450 டொலர்களாக உயர்த்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.