கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் காரணமாகவே மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர் ருமேனிய குடும்பத்தினர், என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் அண்மையில் படகு ஒன்று கவிழ்ந்து இரண்டு சிறார்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இளம் தந்தை ஒருவர் ருமானியாவிற்கு நாடு கடத்தப்படக்கூடிய நெருக்கடியை எதிர்நோக்கிய காரணத்தினால் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
அமெரிக்க கனடிய எல்லைப் பகுதியில் காணப்படும் புனித லோரன்ஸ் நதி வழியாக இவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர் .