Home கனடா பாதுகாப்பு செலவு ஒதுக்கம் தொடர்பில் முரண்பாட்டு நிலை

பாதுகாப்பு செலவு ஒதுக்கம் தொடர்பில் முரண்பாட்டு நிலை

by Jey

கனடாவில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்கான ஒதுக்கம் தொடர்பில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

குறிப்பாக பாதுகாப்பு துறைசார் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இவ்வாறு கருத்து முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

அண்மையில் லிபரல் அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் பல பில்லியன் டொலர்களை சேமிப்பதற்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளது.

எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு இவ்வாறு செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பாதீட்டுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகள் உயர்த்தப்படாத அதேவேளை, பல செலவு குறைப்பு யோசனைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

செலவுகளை மூன்று வீதத்தினால் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செலவு குறைக்கப்படுவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 

related posts