கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் ஐந்து முதல் ஏழு வீதம் வரையில் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பம் ஒன்றே உணவச் செலவு இந்த ஆண்டில் சுமார் ஆயிரம் டாலர்களினால் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் உணவுச் செலவு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 16,288 டாலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இது சுமார் 1000 டாலர்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பால் பொருட்கள் இறச்சி மற்றும் மரக்கறி வகைகளுக்கான விலைகள் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம், அந்நிய செலாவணி பெறுமதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.