கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் மார்க்கம் பகுதியில் மரமொன்றின் பகுதி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெட்டிக் கொண்டிருந்த மரத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அந்த நபர் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யோக் பிராந்தியத்தின் 19 அவென்யூ மற்றும் 48 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகிய நபருக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மரம் குறித்த நபரின் வீட்டின் மேல் வீழ்ந்துள்ளது.
பலத்த காற்று டொரன்டோ பகுதியை தாக்கியதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது மரத்தின் ஓர் பகுதி குறித்த நபர் மீது வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் போலீசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.