நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆபத்தான நோய்களை எதிர் நோக்குபவர்கள் போன்றவர் போன்றோர் கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தின் பிரதம சுகாதார அதிகாரி டாக்டர் கயில் மூர்ஸ் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.
கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் சிரேஷ்ட பிரஜைகள், நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்கள் போன்றவர்கள் இவ்வாறு தடுப்பூசியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் கோவிட் தடுப்பூசி ஏற்றுக்கொண்ட ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.