சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும்.
அந்த விமானத்தில் செல்ல 320 பயணிகள் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு தயாராக காத்து இருந்தனர்.
ஆனால் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானம் வரவில்லை. இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீண்டநேரமாகியும் விமானம் புறப்படுவது குறித்து அறிவிப்பு செய்யாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.