Home இலங்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை

by Jey

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியலையும் அமெரிக்கா முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரும், நாட்டின் தலைவர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஒன்பது வருடங்களாக இந்த வேலையை நான் செய்தேன். நான் எப்போதாவது ஒரு நாள் புகார் செய்திருக்கிறேனா அல்லது அழுதிருக்கிறேனா?

போரையும் மீறி நாங்கள் எங்கள் பணியை செய்தோம். அதுதான் மத்திய வங்கி ஆளுநருக்கும் நாட்டின் தலைவர்களுக்கும் தேவை.

இனி எங்களிடமோ அல்லது இந்த நாட்டின் தலைவரிடமோ பேசுவதில் அர்த்தமில்லை. எல்லாமே அமெரிக்கா” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தகவலை இராணுவ ஆய்வாளர் அரூஸும் நேற்றைய தினம் சொல்லியுள்ளார்.

 

related posts