திருகோணமலை – திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் தற்போதும் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடனேயே இருப்பதாக தெரியவருகிறது.
திருக்கடலூர் இளைஞர்கள் வருடாந்தம் புத்தாண்டை ஒட்டி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழமையாகும். எனினும் இவ்வருடம் போட்டிகளை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
விஜிதபுர, திருக்கடலூர் கிராமத்தை ஒட்டிய பகுதியில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் சிங்கள கிராம மக்களின் ஒப்புதலுடன் விளையாட்டு போட்டிக்கு நிதி சேகரிக்க, மீன்பிடிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
எனினும் இது தெரியாத சிங்கள கடற்தொழிலாளர்கள் சிலர் தமிழ் கடற்தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே இது இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் மாறியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் தற்போதைய நிலவரம் தொடர்பில் திருக்கடலூர் கடற்தொழிலாளர் சமூகத்தினர் எமது செய்திச் சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்தனர்.