பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீன அதிபர் ஜின்பிங்கை அவரது மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது `உக்ரைன் போரில் அமைதியை உருவாக்குவதில் சீனா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்’ என மேக்ரான் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த பயணத்துக்கு முன்பு சீனாவுடனான தங்களது நாட்டின் வர்த்தகம், உணவு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அதிபர் மேக்ரான் டுவிட்டரில் தெரிவித்தார்.
இருப்பினும் உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவது குறித்து இந்த சந்திப்பு முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.