Home உலகம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த பெண் குழந்தை

30 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த பெண் குழந்தை

by Jey

அமெரிக்காவில் தமது பரப்பரையில் முதல் பெண் குழந்தை ஒன்று 130 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்துள்ளதாக தம்பதிகள் பெரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கடந்த, 1885ம் ஆண்டுக்குப் பின் ஆண் குழந்தைகளே அவர்களது பரம்பரையில் பிறந்து வந்த நிலையில் 130 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ கிளார்க். இவரது மனைவி கரோலின் கிளார்க்.

சமீபத்தில் இந்த தம்பதிக்கு, இரண்டாவது குழந்தையாக, பெண் குழந்தை பிறந்தது. கடந்த, 1885ம் ஆண்டுக்குப் பின், ஆண்ட்ரூ கிளார்க் குடும்பத்திற்கு, தலைமுறை தலைமுறையாக பெண் குழந்தை பிறக்கவில்லை ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்தன.

தற்போது, 130 ஆண்டுகளுக்குப் பின், குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதால், ஆண்ட்ரூ கிளார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கரோலின் கிளார்க் கூறுகையில்,

எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கவில்லை என, என் கணவர் ஆண்ட்ரூ கிளார்க் கூறியதை முதலில் நான் நம்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோரிடம் கேட்ட போது தான் உண்மை தெரிய வந்தது.

கர்ப்பமாக இருந்த போது, பெண் குழந்தை பிறக்குமா, ஆண் குழந்தை பிறக்குமா என்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என மட்டுமே முடிவு செய்தோம்.

related posts