Home கனடா எயார் கனடா மீது அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு

எயார் கனடா மீது அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு

by Jey

கனடாவின் முதனிலை விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் மீது அனைத்துலக மன்னிப்புச் சபை இனவாத குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் கனடாவிற்கான பிரதானி கெட்டி நிவ்யாபான்டிக்கு எயார் கனடா விமான சேவையின் ஊடாக பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவிற்கு பயணம் செய்ய முயற்சித்த போது, எயார் கனடா விமானத்தில் ஏறுவதற்கு விமான சேவை நிறுவன பணியாளாகள் அனுமதி மறுத்துள்ளனர்.

உரிய பயண ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புரூண்டியைச் சேர்ந்த நிவ்யாபான்டி இன ரீதியான அடிப்படையில் கனடா விமான சேவை நிறுவனம் தமது பயணத்தை தடுத்து நிறுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

related posts