பா.ஜ.க. சார்பில் கமலாசாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அந்தாரா சர்க்கார் தேப். இவருக்கு எம்.எல்.ஏ.வுக்கான அதிகாரத்திற்கு உட்பட்டு அரசு சார்பில் வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.
எனினும், அதில் பயணிக்காமல் வாடகை ஆட்டோ ஒன்றில் சென்று சொந்த தொகுதியை அவர் பார்வையிட்டு வருகிறார். இதுபற்றி அந்த ஆட்டோவை ஓட்டும் பெண் ஓட்டுநரான லாக்யீ தேப்நாத் நஹா என்பவர் கூறும்போது, தனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருக்கிறார்.
அதனால், ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. பெண் எம்.எல்.ஏ.வுக்கு அரசு அதிகாரம் பெற்ற வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், அவர் எனது ஆட்டோவிலேயே பயணம் செய்கிறார்.
அவர் நன்றாக கவனித்து கொள்வார். இந்த பகுதிக்கு வரும்போது, அவர் எனது ஆட்டோவில் மட்டுமே பயணம் செய்வார் என கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ. சர்க்கார் தேப் தனிப்பட்ட உபயோகங்களுக்கு மட்டுமின்றி, தொகுதியையும் ஆட்டோவில் சென்று பார்வையிடுவதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்