பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தைப் பார்வையிட்ட தெப்பக்காடு, மசினக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு சென்றார்.
பிராஜெக்ட் டைகர் என்ற திட்டம் தொடங்கியதன் 50-ம் ஆண்டு விழாவை ஒட்டி நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967-ல் இருந்து 3,167 ஆக உயர்ந்து உள்ளதாக கூறினார்.உலகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் 75 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.