தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
ஆனால் ’எதிர்க்கட்சி தலைவர் சொல்வதை ஏற்க கூடாது என்பதல்ல. இன்றைக்கு அரசினர் தீர்மானம் உள்ளது. ஆகையால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம்’ என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளோம்.
ஆனால் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவரை போலவே எதிர்க்கட்சித் துணைத் தலைவரையும் ஏற்க வேண்டும்.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளோம்” என்றார்.