கனடாவின் மார்க்கம் பகுதியில் இஸ்லாமிய பக்தர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மார்க்கம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இவ்வாறு குறித்த நபர் அச்சுறுத்தல் விடுத்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய பக்தர் ஒருவரை குறித்த நபர் வாகனத்தில் மோதச் செய்ய முயற்சித்துள்ளார்.
இனக்ரோத அடிப்படையில் குறித்த நபர் கடுந்தொனியின் இஸ்லாமியர்களை விமர்சனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
டொரன்டோ பகுதியைச் சேர்ந்த 28 வயதான சாரன் கருணாகரன் என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது இந்த நபர் எதிர்வரும் 11-ம் தேதி நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.
புனித ரமலான் நோன்பு காலத்தில் இவ்வாறு இஸ்லாமியர்கள் மீது இனக்குரோத அடிப்படையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.