Home உலகம் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

by Jey

உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வர உள்ளார்.

இந்த பயணத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

மேலும் இவர் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, “ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

related posts