சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சியினரின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக ஆக இருக்க ஆளுநர் தயாராக இல்லை என கூறினார்.