Home கனடா பீட்சா விநியோக போர்வையில் மோசடி

பீட்சா விநியோக போர்வையில் மோசடி

by Jey

கனடாவில் பீட்சா விநியோகம் என்ற போர்வையில் சில மோசடி சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பீட்சா விநியோகம் செய்யும் சாரதிகளுக்கு கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும் என சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

பீட்சா விநியோகம் செய்தவருக்கு பணத்தை நேரடியாக வழங்க முடியாது எனக் கூறி அட்டையின் மூலம் பணம் செலுத்த வேண்டும் என சிலரிடமிருந்து டெபிட், கிரெடிட் அட்டைகளைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடியாக பெற்றுக்கொள்ளப்படும் கடன் அட்டையிலிருந்து கூடுதல் தொகை பணத்தை எடுத்துக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் அல்லது டெபிட் அட்டையை வேறொரு அட்டையுடன் இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மிசிஸ் ஆகவா பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்து இவ்வாறு 200400 டாலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடன் மற்றும் டெபிட் அட்டை பயன்பாடு குறித்து மக்கள் போதிய அளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

related posts