Home இலங்கை 2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி

2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி

by Jey

அரசாங்கத்தில் பணியாற்றிய 2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக 30 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 22 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 1ஆம் திகதி வரை உள்நாட்டு விடுமுறைக்கான 150 விண்ணப்பங்களும், வெளிநாட்டு விடுமுறைக்கான 1000 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் என அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

related posts