ஒன்றாரியோ மாகாணத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் டக் போர்டிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒன்றாறியோவின் மார்க்கம் பகுதியில் நபர் ஒருவர் இஸ்லாமிய பக்தர்களை அச்சுறுத்திய சம்பவம் பதிவாகி இருந்தது.
28 வயதான கருணாகரன் என்ற நபர் சில இஸ்லாமிய பக்தர்களை அச்சுறுத்தியதாகவும் வாகனனத்தில் மோதச்செய்ய முயற்சித்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக ஒன்றாறியோ இஸ்லாமிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த இஸ்லாமிய மதவெறுப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த மாகாண அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனை நேரடியாகவும் முழுமையாகவும் அணுகப்படும் வேண்டுமென முஸ்லிம் தலைவர்கள் மாகாண முதல்வரிடம் கோரியுள்ளனர்.