உக்ரைன் பிரதமர் டெனிஸ் சிம்ஹால் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் இன்று காலை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் பல்வேறு உதவிகளை கோரியுள்ளது.
அந்த வகையில் உக்ரைன் பிரதமரின் கனடிய விஜயமும் உதவிகளை கோரும் நோக்கினை முதன்மைப்படுத்தியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்கிரன் போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் கனடிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது.
ராணுவ ரீதியாகவும் ஏனைய நிவாரணங்கள் அடிப்படையிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலும் உக்கிரேனுக்கு 2.4 பில்லியன் சடனுதவியை கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.