பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது.
விரைவு நடவடிக்கைக் குழு தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமிற்குள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.