கனடாவின் எரிபொரள் விநியோகக் கட்டமைப்புக்கள் மீதான சைபர் தாக்குதல்கள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களினால் பௌதீக ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடிய இயற்கை எரிவாயு விநியோகக் கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கனடாவின் சக்தி வளத்துறை விநியோகக் கட்டமைப்பு குறித்த வலையமைப்பிற்குள் ரஸ்ய ஹெக்கர்கள் ஊடுறுவியதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு ரகசிய அறிக்கை வெளியிட்டுள்ளது.