கனடாவில் இயங்கி வரும் ட்ரூடோ அறக்கட்டளையின் முக்கியஸ்தர்கள் பதவி விலகியுள்ளனர்.
ட்ரூடோ அறக்கட்டளையின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
ட்ரூடோ அறக்கட்டளைக்கு சீனா 200,000 டொலர் நிதி உதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் காரணமாக உறுப்பினர்கள் பதவிகளை துறந்துள்ளனர்.
இந்த நன்கொடைத் தொகை சீனா அரசாங்கத்துடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து,; இந்ததொகை மீள அளிக்கப்பட்டுளு;ளது.
கடந்த 2016ம் ஆண்டில் இந்த அறக்கட்டளைக்கு சீனாவிடமிருந்து நன்கொடைத் தொகை கிடைக்கப்பெற்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறக்கட்டளை மனிதாபிமான கற்கைகளை ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் சீன அரசியல் தலையீடு குறித்த சர்ச்சைகளின் எதிரொலியாகவே இந்த அறக்கட்டளையின் அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரூடோ அறக்கட்டளையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை
previous post