ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குகரையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஐந்துபேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
மேற்குகரையில் தனது குடும்பத்தவர்கடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை பாலஸ்தீனிய நபர் என கருதப்படுபவரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த லூசி டீ என்ற 48 வயது பெண்ணிண் உடலுறுப்புகளே ஐந்துபேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 51 வயதான பெண்ணொருவரிற்கு லூசிடீயின் இதயம் வழங்கப்பட்டுள்ளது,58 வயதான பெண்ணிற்கு லூசியின் நுரையீரலும் 25 ஆணிற்கு அவரது கல்லீரலும்,59 மற்றும் 38 வயது ஆண்களிற்கு அவரின் சிறுநீரகங்களும் வழங்கப்பட்டுள்ளதாக டெல் அவியின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய கருவிழிகள் எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.