றொரன்ரோவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்பய்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சுமார் 450 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை கடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.