உத்தர பிரதேசத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பீர்சிங் கிராமம் அருகே தில்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதில் பின் பக்கத்தில் டிராலியில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில், டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓடியுள்ளது. பின்னர் தடுப்பு சுவரில் மோதி, கர்ரா ஆற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து உள்ளது.
இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.