Home கனடா கனடிய வங்கிக் கட்டமைப்பு எதிர்நோக்கும் ஆபத்து

கனடிய வங்கிக் கட்டமைப்பு எதிர்நோக்கும் ஆபத்து

by Jey

கனடாவின் வங்கிக் கட்டமைப்பு ஆபத்துக்களை எதிர்நோக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி ஆளுனர் ரிஃப் மெக்கலம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முதனிலை நிதி நிறுவனங்கள் அண்மையில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் ஏனைய நாடுகளின் நிதிக் கட்டமைப்புக்களை போன்றே கனடாவிலும் ஆபத்துக்களை நிராகரித்து விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டு வருவதாகவும் இதனால் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

related posts