உக்ரேனின் பக்முத் நகரில் தனது தனியார் ராணுவக் குழுவான வாக்னர் மேலும் 2 இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நகரத்தின் வடக்கு தெற்குப் பகுதிகளை அந்தக் குழு தன்வசப்படுத்தியிருப்பதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த நகரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்யா பல மாதங்கள் போராடியிருக்கிறது. அதில் வாக்னர் குழு முக்கியப் பங்கு ஆற்றியது.
இருப்பினும் உக்ரேனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுகண்டிருப்பதாக அறிவிக்கும்படி அந்தக் குழு ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டது.
கீவ்வின் ராணுவப் படைகளின் பெரும் பகுதியை அழிக்கும் இலக்கை ரஷ்யா அடைந்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மற்றொரு நகரில் நடந்த குண்டுவீச்சில் மாண்டோர் எண்ணிக்கை 11க்கு அதிகரித்தது. மேலும் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் 21 பேர் காயமுற்றனர்.