Home இலங்கை மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வெப்பம்

மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வெப்பம்

by Jey

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலக அதிக வெப்பத்தை உள்ளீர்த்தலால் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து குறைபாடானது மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அதிகளவில் வெயிலில் அன்றாட செயற்பாடுகளில் அல்லது தொழிலில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

எனவே இந்த குழுவினர் அநாவசியமாக வெயிலில் செல்வதை நிச்சயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் உள்ளிட்ட ஏனைய அனைவரும் அதிக வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்து கொள்வதற்காக ஆடைகளை அணியும் போதும் இள நிறத்தில் அணிவது பொறுத்தமானதாகும்.

அத்தோடு அதிகளவில் நீர் அருந்துதல் மிக முக்கியமானதாகும். எனவே நாளொன்றுக்கு சுமார் இரண்டரை லீட்டர் நீர் அருந்துதல் பொறுத்தமானது.

நீர் ஆகாரங்கள் அல்லது நீர் தன்மையுடைய உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமே தவிர, குளிர் பானங்களை அளவுக்கதிகமாக அருந்துவது பொறுத்தமற்றது.

related posts