நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார்.
படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், தொகையை காசோலையாக வழங்கியுள்ளார்.
இந்த காசோலை வங்கியில் செலுத்திய போது அவர் கணக்கில் இருந்து பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதையடுத்து செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.