Home சினிமா நான் சோப்புதான் விற்கிறேன்…….

நான் சோப்புதான் விற்கிறேன்…….

by Jey

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன்.

ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுக்குட்டி படம் மூலம் தான் பிரபலமானார்.

இதையடுத்து ரஜினியுடன் எஜமான், கமலுடன் பஞ்சதந்திரம் போன்ற பி ஹிட் படங்களிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

யூடியூப் சேனலில் ஆர்டரை பெறுவதற்காக வாட்ஸ் அப் நம்பரை போட்டதில் இருந்து தொடர்ந்து ஆபாச மெசேஜ் வந்துகொண்டே இருக்கிறது. இதில் சில ஆண்கள் மிகவும் ஆபாசமாக மெசேஜ் செய்கிறார்கள்.

இதுபற்றி வீடியோவில் பேசவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், என் மகள் இதுபோன்று பிரச்சனை வந்தால் பெண்கள் முன்வந்து பேச வேண்டும். நீயே இப்படி அமைதியாக இருக்காதே என்றார். இதனால் தான் இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என கூறி உள்ளார்.

சிலர் நான் உன்ன வாங்களானு பார்த்தேன்…வயசு ஆனாலும் சும்மா கும்முனு இருக்க என்று தன்னுடைய ஆபாச போட்டோ எடுத்து அனுப்பி உள்ளார்.

இதற்கு பதில் அளித்த அவர் இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியலயா, மெனோபாஸ் நின்ன 52 வயசு கிழவிடா நானு, இங்கே ஒன்னும் கிளாமர் ஆடலடா மானம் கெட்ட பசங்களா.

நான் சோப்புதான் விற்கிறேன், என்னை விற்கவில்லை, வாட்ஸ் அப் நம்பரிலேயே காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை என்று தெளிவா போட்டு இருக்கிறேன்.

அதன் பிறகும் இரவு 11 மணிக்கு மெசேஜ் அனுப்பினால் என்ன அர்த்தம். யூடியூபில் வந்து சோப்பு விற்பதால், ஹாய் வானு சொல்லுவேனு நினைச்சியா என்று ஆபாச புகைப்படம் அனுப்பியவரின் போட்டோவை வீடியோவில் காட்டி,இந்த பையனை பெற்ற புண்ணியவதியே நீயே பாரு என்று கூறி உள்ளார்

related posts