கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக மக்களால் வரவேற்பை பெற்றது.
கல்வி தான் இந்த உலகின் ஆகச்சிறந்த சொத்து என்பதை உணர்ந்த தமிழகத்தின் தலைவர்கள், போட்டி போட்டுக்கொண்டு படிக்க வைப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்தினார்கள் .
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்று தொடங்கி, சத்துணவு, சத்துணவில் முட்டை, அங்கன்வாடி திட்டம், இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், சீருடைகள், லேப்டாப், காலை உணவு, மாணவிகளுக்கு மாதம் உதவி தொகை வரை கல்விக்காக திட்டங்கள் திட்டினார்கள்.