ஜப்பான் நாட்டில் கரூய்ஜவா நகரில் ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நடந்தது.
இதில் ஜி-7 உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் கூட்டத்தில் பங்கேற்றன.
இதற்கும் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. உக்ரைன் மீது நடத்தப்படும் போரானது ஒரு தீவிர சர்வதேச சட்ட விதிமீறலை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டதுடன், உக்ரைனில் இருந்து உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அனைத்து படைகள் மற்றும் தளவாடங்களை ரஷியா திரும்ப பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளது.